நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத் தமிழ் மொழி கழகத்தின் (TLS) ஏற்பாட்டில் அவிரா 2.0 நாடகப் போட்டி நடைபெறவுள்ளது

கோத்தா பாரு:

மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத் தமிழ் மொழி கழகத்தின் (TLS) ஏற்பாட்டில் அவிரா 2.0 நாடகப் போட்டி நடைபெறவுள்ளது. 

இந்நாடகப் போட்டி ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. 

கலை துறையில் மாணவர்களிடையே உள்ள திறன்களை வெளிக்கொணறவும் மேலும் அத்திறன்களை வளர்க்கவும் இம்மேடை உறுதுணையாக இருக்கும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

அவிரா நாடகப் போட்டி பல்கலைக்கழகம் மற்றும்
சமூகத்திற்கிடையே நாடகக் கலை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் 
மாணவர்கள், சமூகத்தினருக்கிடையிலான சமூக உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகின்றது. 

இம்முறை  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அனைத்துப்  பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இவ்வாய்ப்பு திறக்கபடவுள்ளது. 

எனவே இப்போது நிதியுதவி தேடும் பணியில் இருப்பதால் தங்களுக்கு மற்ற துறைகளில் இருந்து நிதியுதவி மற்றும் ஆதரவு கிடைத்தால் இந்நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்று மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத் தமிழ் மொழி கழகத்தின் தலைவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset