நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் பிரிவு மூன்றில் அரசாங்கம் மீட்ட 300 மீட்டர் நிலம் குறித்து WCE நிறுவனம் விளக்கம்

கிள்ளான்: 

கிள்ளான், தாமான் செந்தோசா அருகேயுள்ள வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே, WCE எனும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் பிரிவு மூன்றில் 300 மீட்டர் நில விவகாரம் குறித்து எழுப்பட்ட பிரச்சனைக்கு மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது. 

வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே (WCE) இன் திட்டத்திற்காக அரசாங்கம் இந்த 300 மீட்டர் நிலத்தை அரசாங்கம் சட்டப்பூர்வமாக மீட்டது. 

அதன் பின், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே (WCE) இன் திட்டத்தின் செயல்முறையைத் தாமதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் சமீபத்தில் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு விண்ணப்பமும் அடங்கும் என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. 

கடந்த 2023-ஆம் ஆண்டு நிலத்தை மீட்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக நில உரிமையாளர்கள் இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்பூர்வமாக நிலத்தைக் காலி செய்யும் செயல்முறையைத் தொடங்க Borang K வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நில உரிமையாளர் நிலத்தைக் காலி செய்வதை ஒத்திவைக்க இடைக்கால தடை உத்தரவைத் தாக்கல் செய்தார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நில உரிமையாளர் தாக்கல் செய்த இடைக்காலத் தடை உத்தரவை நீதிமன்றம் நிராகரித்து அந்த நிலத்தை அரசாங்கம் முறையாக மீட்டதாகத் தெரிவித்தது. 

இருப்பினும், நில உரிமையாளர் நிலம் காலி செய்யவில்லை. இதனால் நெடுஞ்சாலையின் பிரிவு 2 மற்றும் பிரிவு 4 க்கு இடையில் மேற்கொள்ளப்படவிருந்த இணைப்பு திட்டத்திற்கு இடையூறாக இருப்பதை மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை நிறுவனம் உறுதிப்படுத்தியது. 

தற்போது நில உரிமையாளரிடம் கோரி  நிலத்தைக் காலி செய்ய வழிவகை செய்யும் அது தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை நிறுவனம் பணியாற்றி வருகிறது.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிலத்தைக் காலி செய்யும் செயல்முறையை மேற்கொள்ள நிறுவனத்திற்கு முழு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதையும்  மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை நிறுவனம் தெளிவுப்படுத்தியது. 

சட்டப்படி நிலம் காலி செய்யப்பட்ட பின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும். 

இந்த விவகாரம் குறித்த அண்மையத் தகவலை மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை நிறுவனம் அவ்வப்போது பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டது. 

மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை திட்டம் நாட்டின் பெரிய நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

இந்த நெடுஞ்சாலை திட்டம் சிலாங்கூர் பந்திங்கில் தொடங்கி பேரா தைப்பிங்கில் நிறைவடையும். இதன் நீளம் 233 கி.மீ. ஆகும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset