நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் துப்பாக்கி பறிமுதல்; அனுமதியை ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது: போலிஸ்

ஈப்போ:

துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அத்துப்பாக்கியின் அனுமதியை ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது என்று பேரா மாநில போலிஸ்  தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் இதனை கூறினார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் கிளைத் தேர்தலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டுகள்  எழுந்தது.

இதை தொடர்ந்து  விசாரணைகளுக்கு உதவுவதற்காக உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அராபத் வருசை மஹமத்துக்குச் சொந்தமான துப்பாக்கியை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

துப்பாக்கி அனுமதி வைத்திருக்கும் எந்தவொரு நபரும் காவல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தால், ஆயுதங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை.

மேலும்  அனுமதியை ரத்து செய்யக் கோரி போலிசார் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி விண்ணப்பம் செய்யதனர்.

மறுநாள் சட்டமன்ற உறுப்பினர் துப்பாக்கியை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset