
செய்திகள் மலேசியா
வரிகள் குறித்த முறையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது: தெங்கு ஸப்ரூல்
புத்ராஜெயா:
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 24% வரி விகிதம் தொடர்பாக மலேசியாவுடன் முறையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு ஸப்ரூல் அஜிஸ் இதனை கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகள், வரி குறைப்பு, வரி அல்லாத தடைகள் ஆகிய மூன்று குறிப்பிட்ட பகுதிகளில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்தும்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்த அமைச்சின் துணைப் பொதுச் செயலாளர் நியமிக்கப்படுவார்.
மேலும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திலிருந்து ஒரு உதவியாளரையும் பேச்சுவார்த்தையாளராக நியமித்துள்ளதாக அவர் கூறினார்.
பெரும்பாலான மலேசியப் பொருட்களுக்கு 24% வரி விதிக்கப்படுகிறது. சுமார் 60 நாடுகள் மீது பல்வேறு வரிகளை விதிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கும் வகையில் 90 நாட்களுக்கு வரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 10% முழுமையான வரி நடைமுறையில் உள்ளது என்று அவர் கூறினார்..
முன்னதாக வரிகள் குறித்து விவாதிக்க தெங்கு ஸப்ரூல் கடந்த ஏப்ரல் 23 முதல் 27 வரை அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுடனான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், பெய்ஜிங்கின் உற்பத்தி ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் வரி பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm