நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் கொரியா, ஜப்பானுக்கு கடத்த முயன்ற 82 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் காஜாங்கில் பறிமுதல்

கோலாலம்பூர்:

காஜாங்கில் தென் கொரியா, ஜப்பானுக்கு கடத்த முயன்ற 82 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் செயல் இயக்குநர் மாட் ஜைய்னி என்ற முகமத் சலாவுடின் இதனை கூறினார்.

கடந்த வியாழக்கிழமை காஜாங்கில் சியாபு, கெட்டமைன், எக்ஸ்டசி ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில்  இந்த ஆண்டின் மிகப்பெரிய சோதனை, பறிமுதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

இந்த சோதனையில் போதைப்பொருள் விநியோகம்,  பேக்கேஜிங் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த 27 முதல் 39 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்களை போலிசார்  கைது செய்துள்ளனர்.

போதைப்பொருட்கள் லத்தீன் அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக போர்ட் கிள்ளானிற்கு கொன்டு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் காஜாங்கில் மூன்று இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, பிளாஸ்டிக் துண்டுகளாக அறிவிக்கப்பட்ட பொருட்களில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தென் கொரியா, ஜப்பானில் உள்ள வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு முன்பு பேக்கேஜிங் பணிகளை மேற்கொள்வர்.

அதே நேரத்தில் சிறிய அளவில் சில உள்ளூர் சந்தைக்கு அனுப்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset