நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வில் நன்னெறி பாடமும் முக்கியமானதே; இந்திய மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சுரேன் கந்தா

பெட்டாலிங் ஜெயா:

எஸ்பிஎம் தேர்வில் நன்னெறி பாடமும் முக்கியமானதாக இருப்பதால் இந்திய மாணவர்கள் முழு விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தினார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கல்வி திட்ட வரைவில் 2025ஆம் ஆண்டில் இடைநிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக இருக்கும் என திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது.

இதே போன்று கணிதம் உட்பட பல பாடங்களின் தேர்ச்சி நிலையும் குறைந்து விட்டது.

இதற்கு என்ன காரணம் என்று அரசாங்கம் முழுமையாக ஆராய வேண்டும். மேலும் மலாய் மொழி, வரலாறு படங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும்.

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் சாதிக்கலாம் என்று சிந்தனை என்ற நிலைபாட்டில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும்.

எஸ்பிஎம் தேர்வில் அனைற்று பாடங்களும் முக்கியம் தான். ஏன் கல்வி உபகாரச் சம்பளத்திற்கு நன்னெறி கல்வியில் கூட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆக இதுபோன்ற விவகாரங்கள் குறித்து இந்திய மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும். இதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அர்ஜுனா வியூகம் வழிக்காட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

இக்கருத்தரங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ளது.

எஸ்பிஎம் மாணவர்கள் திரளாக வந்து இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று சுரேன் கந்தா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset