
செய்திகள் மலேசியா
அலோர்ஸ்டாவில் மர்மக் கிருமித் தொற்று தாக்கியதில் 39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிப்பு
அலோர்ஸ்டார்:
கெடா மாநிலத்தில் உள்ள யான் மாவட்டத்தில் மர்மமான கிருமித் தொற்று பரவல் கண்டறியப்பட்டது.
இதனால் 39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கிருமித்தொற்று முதலில் அஞ்சப்பட்ட அளவுக்கு மோசமானதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றுக்கு ஆளான 39 பேரில் இருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில வீடமைப்பு, ஊராட்சி, சுகாதாரக் குழுத் தலைவர் மன்சோர் ஜக்காரியா கூறினார்.
14 வயது பள்ளி மாணவர் ஒருவரும் 30 வயதைத் தாண்டிய பள்ளி பேருந்து ஓட்டுநரும் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவர்.
இருவரும் குணமடைந்துவரும் அறிகுறிகள் தெரிவதாக அவர் சொன்னார். கண்காணிக்கப்பட்ட மற்ற மாணவர்கள் இப்போது மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக யாரும் கிருமித்தொற்றுக்கு ஆளாகவில்லை. நிலைமை மோசமானதுபோல் முதலில் தெரிந்தது.
ஆனால், முதலில் கருதப்பட்ட அளவு நிலைமை மோசமானதல்ல. கிருமித்தொற்று ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்ற பின் அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2025, 3:37 pm
ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்க அனுமதி: முஹம்மத் சாபு
April 28, 2025, 2:12 pm
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு
April 28, 2025, 12:47 pm
கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை தலைவருக்கு அனுமதி: கூட்டரசு நீதிமன்றம்
April 28, 2025, 11:29 am