
செய்திகள் மலேசியா
பாலஸ்தீனத்திற்கு எதிரான குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர மலேசியா - மாலத்தீவு வலியுறுத்து: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள், படுகொலைகள் சம்பவங்களுக்கு எதிராக மலேசியா - மாலத்தீவு வலியுறுத்துவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இஸ்ரேலிய கடப்பிதழை வைத்திருக்கும் தனிநபர்கள் தனது நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்ய முடிவு செய்ததில் மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹம்மத் முய்சுவின் துணிச்சலான செயல் வரவேற்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, மலேசியா ஒரு போது இஸ்ரேலின் செயலை ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் மனித உரிமைகளை மதிக்க மறுத்தல், சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்ற மறுத்தல், குறிப்பாக காசாவில் இனப்படுகொலையை நிறுத்த மறுத்தல் போன்ற நடவடிக்கைகளால் மலேசியா இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்று பிரதமர் விளக்கமளித்தார்.
இஸ்ரேல் விவகாரத்தில் மாலத்தீவும் மலேசியாவின் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது சரியானது என்று மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹம்மத் முய்சுவுடனான அதிகாரப்பூர்வச் சந்திப்பில் பிரதமர் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதில் மாலத்தீவு உறுதியாக உள்ளது என்று முய்சு கூறினார்.
1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திர அரசைக் கொண்டிருக்க பாலஸ்தீன மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று முதல் மலேசியாவிற்கு நான்கு நாள்கள் பயணமாக வந்த முய்சுவுக்கு, பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்புக்குப் பிறகு, அன்வரும் முய்சுவும் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு நேரடியாகச் சந்தித்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2025, 3:37 pm
ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்க அனுமதி: முஹம்மத் சாபு
April 28, 2025, 2:12 pm
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு
April 28, 2025, 12:47 pm
கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை தலைவருக்கு அனுமதி: கூட்டரசு நீதிமன்றம்
April 28, 2025, 12:22 pm
அலோர்ஸ்டாவில் மர்மக் கிருமித் தொற்று தாக்கியதில் 39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிப்பு
April 28, 2025, 11:29 am