நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை தலைவருக்கு அனுமதி: கூட்டரசு நீதிமன்றம்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கில் கூடுதல் ஆவணங்கள் இருப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்ய கோரிய சட்டத்துறை தலைவரின் விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மேல்முறையீடு தொடர்பாக சட்டத்துறை தலைவர் எழுப்பிய கேள்விகள்  1964 ஆம் ஆண்டு நீதித்துறை நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 96 இன் கீழ் அனுமதி வழங்குவதற்கான வரம்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்ததாக மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா முஹம்மத் ஹாஷிம் தலைமையிலான  Zabariah Mohd Yusof, Hanipah Farikullah ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்தது. 

நஜிப்பின் கூடுதல் ஆவணங்கள் தொடர்பான சட்டத்துறை தலைவரின் மேல்முறையீட்டை விசாரிக்க ஜூலை 1- முதல் இரண்டு நாட்களை கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயித்தது.

முன்னதாக, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சட்டத்துறை தலைவர் விண்ணப்பித்துள்ளார்.

கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைத் தொடர இந்த சட்டத்துறை தலைவர் அனுமதியைப் பெற வேண்டும்.

ஜனவரி 6-ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம், 2-1 என்ற பெரும்பான்மை முடிவின் மூலம், நஜிப்பின் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை, வழக்கின் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

மீதமுள்ள ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதித்ததாகக் கூறப்படும் கூடுதல் ஆவணங்கள் இருப்பதாக நஜிப் கூறினார்.

கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வைத் தொடங்க அனுமதி கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்த முந்தைய உயர் நீதிமன்றத் தீர்ப்பை இந்த முடிவு ரத்து செய்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset