
செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள் சாதனை; கல்வியில் இன ரீதியிலான பாகுபாடுகள் இருக்கக் கூடாது: சுரேன் கந்தா
பெட்டாலிங் ஜெயா:
கல்வியில் இன ரீதியிலான பாகுபாடு இருக்கக் கூடாது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.
2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்த தேர்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.
திவ்யாஷினி பாகன் 11ஏ, மோகனபிரியா சுப்பிரமணியம் 7ஏ, வாசுதேவன் சிவாநந்தா 7ஏ, மிர்ஷாலினி சுப்பிரமணியம் 7ஏ, கலையரசி முகுந்தன் 7ஏ, ரோஷன் 6ஏ, அஸ்மிதா ஜெகநாதர் 6ஏ பெற்றனர்.
இதே போன்று நாடு முழுவதும் பல மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றனர்.
இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சிறந்த மாணவர்களை கொண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்த சாதனையை புரியவில்லை.
மாறாக முன்கூட்டியே கல்வி போதனையுடன் பயிற்சிகளை நடத்துகிறது. இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் சாதனைக்கு வெற்றியாக உள்ளது.
மேலும் இம்மாணவர்கள் அடுத்து உயர் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். குறிப்பாக இம்மாணவர்கள் மெட்ரிகுலேசன் வாயிலாக அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்வார்கள்.
அப்படி விண்ணப்பம் செய்யும் அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
எந்தவொரு சூழ்நிலையில் கல்வியில் இன ரீதியிலான பாகுபாடுகள் பார்க்கப்படக் கூடாது.
இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மிகப் பெரிய கோரிக்கையாக உள்ளது. மேலும் மாணவர்கள் சிறந்த துறையை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
பெட்டாலிங்ஜெயா ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற எஸ்பிஎம் மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் சுரேன் கந்தா இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2025, 3:37 pm
ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்க அனுமதி: முஹம்மத் சாபு
April 28, 2025, 2:12 pm
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு
April 28, 2025, 12:47 pm
கூடுதல் ஆவணங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை தலைவருக்கு அனுமதி: கூட்டரசு நீதிமன்றம்
April 28, 2025, 12:22 pm
அலோர்ஸ்டாவில் மர்மக் கிருமித் தொற்று தாக்கியதில் 39 பள்ளி மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதிப்பு
April 28, 2025, 11:29 am