நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்க அனுமதி: முஹம்மத் சாபு 

கோலாலம்பூர்:

ஒருவருக்கு 5 பாக்கெட்டுகள் வரை 10 கிலோ அரிசி வாங்கலாம் என்று விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் சாபு தெரிவித்தார். 

இதற்கு முன் ஒருவர் 2 பாக்கெட்டுகள் 10 கிலோ அரிசியை  வாங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

பொது மக்களின் தற்போதைய தேவைகளை, குறிப்பாக ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களைக் கருத்தில் கொண்டு இந்தத் தளர்வு வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.  

ஏப்ரல் மாத மத்தியில் நாடு முழுவதும் 47,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மளிகை கடைகளில் மொத்தம் 3.16 மில்லியன் 10 கிலோ அரிசி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர், கெடா, பேராக் மற்றும் ஜொகூர் போன்ற மாநிலங்களில் அரிசியின் விநியோகம் அதிகமாக இருந்தது. 

அரிசி விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கான அமைச்சகத்தின் முக்கியமான முயற்சிகளில் இந்த நடவடிக்கையும் ஒன்றாகும்.

செர்டாங்கின் மேப்ஸில் நடைபெற்ற விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (KPKM) மாதாந்திரக் கூட்டம் மற்றும் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset