
செய்திகள் மலேசியா
திருட்டுத் தனமாக நாட்டிற்குள் வருபவர்களை ஹராம் என்று கூற முடியாது என்றால், இந்து ஆலயங்களை ஹராம் எனக் கூறலாமா?: டத்தோஶ்ரீ சரவணன் கேள்வி
கிள்ளான்:
திருட்டுத் தனமாக நாட்டிற்குள் வருபவர்களை ஹராம் என்று கூற முடியாது என்றால், இந்து ஆலயங்களை ஹராம் எனக் கூறலாமா.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இக்கேள்வியை எழுப்பினார்.
கடந்த காலங்களில் நாட்டிற்குள் திருட்டுத் தனமாக நுழைபவர்களை பென்டாதாங் ஹராம் என அரசாங்கம் கூறியது.
பென்டாதாங் ஹராம் என்று எங்கள் நாட்டவரை கூறக் கூடாது என அவர்களின் சொந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
உடனே மலேசிய அரசு அனுமதி இல்லாமல் நாட்டிற்கு நுழையும் அந்நிய நாட்டவர்கள் என மாற்றியது.
திருட்டுத் தனமாக நாட்டிற்கு வந்தவர்களை ஹராம் என கூறுவதை பிடிக்கவில்லை என்றால்,
இந்நாட்டின் வளர்ச்சிக்கு வியர்வையும் ரத்தத்தையும் சிந்திவர்களின் ஆலயங்களை ஹராம் என்று கூறும் போது ஒவ்வொரு இந்துக்களுக்கு எவ்வளவு வலிக்கும் என்று அவர்களுக்கு தெரியாமல் போனது வேதனை தான்.
மேலும் ஆலயங்களை ஹராம் என்று கூறுவதற்கு நமக்குள் இருக்கும் ஒற்றுமையும் ஒரு முக்கிய காரணம்.
ஹராம் என்று கூற வேண்டாம் என ஒருவர் குரல் கொடுப்பார். மற்ற மூவர் அமைதியாக இருப்பார்கள். இதற்கு அவர்களின் சுயநலம் தான் காரணம்.
காப்பார் வாழ் மக்கள் ஏற்பாடு செய்த தமிழர் திருநாள் பண்பாட்டு விழாவின் நிறைவு விழாவில் பேசிய டத்தோஶ்ரீ சரவணன் இதனை கூறினார்.
தொன்மையான மொழியையும், நாகரீகத்தையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் பெருமையும், கர்வமும் கொள்ள வேண்டும்.
அதனைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவிற்குத் தலைமையேற்றுச் சென்றதில் மகிழ்ச்சி.
இன்றைய சூழலில் பண்பாட்டு விழாக்கள் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நல்லொழுக்கம், உயர்ந்த பண்புகள், மொழி, பண்பாட்டு நாகரிக விழுமியங்கள், பாரம்பரியங்களைக் கொண்டவர்கள் தமிழர்கள்.
இளைஞர்கள் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள பேருதவியாக அமையும் இதுபோன்ற விழாக்கள் தான் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm