நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரர்களை ஏமாற்றியதாக 10 பேர் கைது

குளுவாங்:

சிங்கப்பூரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை மோசடி செய்ததாக நம்பப்படும் பத்து பேரைக் கைதுசெய்துள்ளது.

சந்தேகத்திற்குரிய மோசடிக்காரர்கள் சிரமத்தில் இருப்போரைப் போல ஆள்மாறாட்டம் செய்து சமூக ஊடகத் தளங்களில் உள்ள நண்பர்களை அணுகி நிதியுதவி கேட்டதாகக் போலிசார் குறிப்பிட்டனர்.

இஸ்கந்தர் புத்ரியில் உள்ள மூன்று அடுக்குமாடி வீடுகளில் சில நாள்களுக்குச் சோதனை செய்த போலிஸ் அதிகாரிகள் சந்தேகத்திற்குரியோரைப் பிடித்தனர். 

அவர்களில் குறைந்தது ஆறு பேர் 20 வயதிலிருந்து 40 வயதுக்கு உடப்பட்டவர்கள். 

அவர்கள்மீது இதற்குமுன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் 1,000 ரிங்கிட்டிக்குள் இருந்தாலும் பலரை அந்தக் கும்பல் ஏமாற்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

வர்த்தகக் குற்ற விசாரணைத் துணை அதிகாரிகள் கட்டடத்தைச் சோதிப்பதற்கு முன் பல மாதகங்களாக அந்தக் குடும்பல் அங்கு அழைப்பு நிலையங்களை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset