செய்திகள் மலேசியா
பாஹாங்கில் குர்ஆனை மிதித்ததாகச் குற்றம் சாட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவர் இஸ்லாத்தை ஏற்றதாக எந்த பதிவும் இல்லை: MUIP
குவாந்தான்:
பாஹாங்கில் இஸ்லாமை அவமதித்து சமூக ஊடகங்களில் அருவருப்பான பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படும் உயர்கல்வி நிறுவன மாணவர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதாக எந்தப் பதிவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுத்தள ஆய்வின் அடிப்படையில் 21 வயதுடைய அந்த மாணவர் முஸ்லிமாக மாறியவராக பதிவு செய்யப்படவில்லை என்று பஹாங் இஸ்லாமிய மத, மலாய் சுங்க கவுன்சிலின் (MUIP) துணை தலைமை நிர்வாக அதிகாரி (பைத்துல்மால், செயல்பாடுகள்) டாக்டர் அஸ்மாதி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டோம். அந்த மாணவர் அங்கு இஸ்லாம் மதத்தை ஏற்றதாக எந்த தகவலும் இல்லை,” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
“பாஹாங்கில், இஸ்லாம் மதத்தை ஏற்ற ஒவ்வொரு நபரும் மூன்று நாட்கள் தீவிர பயிற்சியில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக தொழுகை செய்வதற்கான வழிகாட்டலுக்காக மூத்த முவாலாவ் ஒருவரால் வழிநடத்தப்படுவார்,” என்று அவர் கூறினார்.
பாஹாங்கில் குர்ஆனை மிதித்ததாக வைரலான அந்த மாணவர் இஸ்லாத்தை தழுவிய புதிய முஸ்லிம் என்றும் அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இஸ்லாத்தை ஏற்றதாகவும் சுயதீன மத போதகர் ஃபிர்தௌஸ் வோங் வை ஹங் நேற்று தன் முகநூலில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 11:38 am
மைக்கியின் தொழில் முனைவோர் மாநாடு 2026; அமைச்சர் ஸ்டீவன் சிம் தொடக்கி வைக்கிறார்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
September 8, 2026, 11:36 am
ஷாஆலம் குண்டர் கும்பல் வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு
September 8, 2026, 11:36 am
ஹாடி அவாங் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்: டத்தோ குமார்
September 8, 2026, 10:59 am
விமான இயந்திர கோளாறு காரணமாக மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறக்கம்: 186 பயணிகள் உயிர் தப்பினர்
September 8, 2026, 10:45 am
கோலா சிலாங்கூர் ஆற்றில் குதித்த உள்நாட்டு ஆடவர்: தீயணைப்பு படைவீரர் விரைவான நடவடிக்கையினால் உயிர் தப்பினார்
September 8, 2026, 8:42 am
இந்த மாத இறுதிக்குள் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படலாம்: முதலமைச்சர் சூசகம்
September 8, 2026, 8:38 am
