செய்திகள் மலேசியா
மத–இன உணர்வுகளைத் தூண்டாதீர்கள்: ஸ்டீவன் சிம் எச்சரிக்கை
ஜார்ஜ் டவுன்:
மலேசியா பல்வேறு இனங்கள், மதங்களை அடிப்படையாகக் கொண்ட நாடாகும். எனவே எந்தக் கட்சியும் தங்களை வீரர்களாகக் காட்டிக்கொண்டு மத அல்லது இன உணர்வுகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று புகிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
“இத்தகைய தூண்டுதல்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, நாட்டைப் பாதிக்கக்கூடிய கோபத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கும்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 3 அன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.
தான் அரசியலில் ஈடுபட்டதிலிருந்து இனமோ மதமோ பார்க்காமல் அனைத்து மலேசியர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே தனது நோக்கமாக இருந்து வருகிறது என்றும் சிம் தெரிவித்தார்.
பினாங்கு மாநில DAP தலைவராகவும் பதவி வகிக்கும் சிம், மார்ச் 7 அன்று புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன்புள்ள இந்து கோயிலில் நடைபெறவிருந்த ‘Ops Terjah’ என்ற போராட்டம் குறித்த சமூக ஊடக பதிவுக்குப் பதிலளித்தார்.
இந்தத் திட்டமிடப்பட்ட கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் கலவரத்தை உருவாக்குவதில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எந்தவொரு தூண்டுதலான கூட்டமும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க போலிசாரிடம் கேட்டுக்கொண்டதாகவும் சிம் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநில PKR இளைஞர் பிரிவும் இந்தத் திட்டமிடப்பட்ட கூட்டத்தைக் கண்டித்துள்ளது. இதை பொறுப்பற்ற செயலாகவும், பதற்றத்தைத் தூண்டும் அபாயம் உள்ளதாகவும் அதன் தலைவர் முஹம்மத் சக்வான் முஸ்தபா கமால் எச்சரித்துள்ளார்.
“இந்தச் சம்பவம் அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளைப் பயன்படுத்தும் ஒரு பொறுப்பற்ற செயலாக தெரிகிறது. பினாங்கு அரசியலுக்கான சோதனை மையமல்ல,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“சட்ட ஆட்சி நிலவும் நாட்டில், எந்த நபருக்கோ, குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ ‘அதிகாரமற்ற அமலாக்க அதிகாரம்’ போல் செயல்பட உரிமை இல்லை,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டமிடப்பட்ட போராட்டம் தொடர்பாக சட்ட மீறல், அத்துமீறல், மிரட்டல் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சக்வான் வலியுறுத்தினார்.
“சட்ட மீறல்கள் இருப்பின், எந்த சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
