செய்திகள் மலேசியா
ஜாலான் பாகான் லாலாங்கில் நில அமிழ்வு
பட்டர்வொர்த்:
பினாங்கு மாநிலத்தின் முக்கிய சாலையான ஜாலான் பகான் லாலாங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அமிழ்வுக்குச் சேதமடைந்த கழிவுநீர் குழாய் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் பழுதுபார்ப்பு பணிகள் மூன்று வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் சிசிடிவி ஆய்வு மூலம் 'Indah Water Konsortium' (IWK) கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட சேதத்தைக் கண்டறிந்ததாக மாநில உட்கட்டமைப்பு, போக்குவரத்து, டிஜிட்டல் குழு தலைவர் சாய்ரில் கீர் ஜோஹர் தெரிவித்தார்.
பகான் லாலாங் சாலையானது பட்டர்வொர்த்தில் உள்ள பகான் லாலாங் குடியிருப்பு பகுதியின் வழியாகச் செல்லும் பிரதான பாதையாகச் செயல்படுகிறது. இந்தச் சம்பவம் பிப்ரவரி 26 அன்று நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சாலை பழுது பார்க்கும் பணிக்காக இரவு நேரங்களில் சாலை மூடல், போக்குவரத்து மேலாண்மை திட்டத்துடன் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
“இந்தப்பகுதியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கவனமாகவும் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்றார் அவர்.
நீண்டகால நடவடிக்கையாக, மாக் மந்தின் பகுதியில் உள்ள பிராந்திய கழிவுநீர் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 12வது மலேசிய திட்டம் (RMK-12) கீழ் பட்டர்வொர்த்தின் வடக்கு பகுதியில் புதிய கழிவுநீர் குழாய் வலையமைப்பு அமைக்கப்படுகிறது.
RM650 மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டத்தில், தற்போதுள்ள குழாய்களுக்குப் பதிலாக புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. இந்த முக்கிய திட்டம் 2029ஆம் ஆண்டில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
