செய்திகள் மலேசியா
ரமலான் மாதத்தில் கண்காணிப்பு தீவிரம்: ஒழுக்க மீறலில் ஈடுபட்டோர் மத அமலாக்க துறையினரால் கைதாகினர்
ஜொகூர் பாரு:
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மத அமலாக்க திடீர் சோதனைகளில் திருமணம் ஆகாத ஜோடிகள், சூதாட்டத்தில் ஈடுபட்ட முதியவர்கள், பகலிலே புகைப்பிடித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத் தலைநகரில், 20 வயதில் உள்ள ஒரு காதல் ஜோடிகள் தங்கும் விடுதியில், ஒரே அறையில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கூலாய் பகுதியில், 60 வயதுடைய ஓய்வுபெற்ற ஒருவர் சூதாட்டச்சீட்டு வாங்கியபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
குளுவாங் பகுதியில், மூன்று ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து, குழந்தையும் பெற்றுள்ள ஒரு ஜோடி அதிகாலை சோதனையில் பிடிபட்டனர். சட்டபூர்வ திருமணம் இன்றி கணவன்-மனைவியாக வாழ்ந்ததாக ஒப்புக்கொண்ட இவர்களுக்கு ஒழுக்கக்குற்றமும், விபச்சார குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் பொன்தியான் பேருந்து நிலையத்தில், பகலில் புகைபிடித்த 30 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார். ரமலான் கால கண்காணிப்பு நடவடிக்கைகள் நோன்பு மீறல் மட்டுமன்றி, ஒழுக்கக்குற்றம், சூதாட்டம், புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட மீறல்களையும் உள்ளடக்கியதாக மதத் துறை தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
