செய்திகள் மலேசியா
பாராங்கத்தி ஏந்திய கும்பல் தாக்கியதில் ஆடவர் ஒருவர் 5 விரல்களை இழந்தார்
சுபாங்ஜெயா:
பாராங்கத்தி ஏந்திய ஐவர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஆடவர் ஒருவர் 5 விரல்களை இழந்தார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை சுபாங் ஜெயாவின் பண்டார் சன்வே ஜாலான் பிஜேஎஸ் 11/2இல் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் அதிகாலை 1.54 மணியளவில் நடந்ததது.
பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் அந்த இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டனர்.
30 வயதான பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் வீடு திரும்பும் போது திடீரென ஒரு டொயோட்டா வியோஸ் கார் அவர்களை நோக்கி வந்தது.
வாகனத்தில் இருந்து இறங்கி முகமூடி அணந்திருந்த ஐந்து பேர் பாராங்கத்தியை கொண்டு பாதிக்கப்பட்டவரையும் அவரது நண்பர்களையும் தொடர்ந்து தாக்கினர்.
பாதிக்கப்பட்டவருக்கு தப்பிக்க வழி இல்லாததால் அவர் பல முறை வெட்டப்பட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டவரின் கைகள், கால்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
கூடுதலாக அவரது இடது கையில் ஐந்து விரல்களை இழந்தார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 11:15 am
மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர், SIMS KL , MMYC இணைந்து காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு
December 9, 2025, 10:47 am
போலிஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
December 8, 2025, 8:02 pm
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்
December 8, 2025, 7:59 pm
எல்லைப் பதட்டங்களை தாய்லாந்து, கம்போடியா உடனடியாக தணித்துக் கொள்ள வேண்டும்: மலேசியா வலியுறுத்து
December 8, 2025, 3:08 pm
