செய்திகள் மலேசியா
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 50% சுங்கக் கட்டண தள்ளுபடி
கோலாலம்பூர்:
2026 ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, சுங்கக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை சுமார் RM19.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு இனங்கள், மதங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமையையும் நலனையும் பாதுகாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
“இந்தத் தள்ளுபடி, பிப்ரவரி 14 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும். பண்டிகைக்காக ஊருக்குச் செல்லும் அல்லது விடுமுறைக்குச் செல்பவர்களின் பயணச் செலவுகளைக் குறைக்க உதவுவதுடன் தொடர்ந்து ரமடான் மாதத்தில் நோன்பு இருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என அவர் கூறியுள்ளார்.
இந்தத் தள்ளுபடி, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தனியார் வாகனங்களுக்கும், பினாங்கு பாலத்தில் வகுப்பு 2 வாகனங்களுக்கும் பொருந்தும். ஆனால், நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள், அதாவது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம் சுங்கச்சாவடி, மலேசியா-சிங்கப்பூர் இரண்டாம் பாதையில் உள்ள தஞ்ஜோங் குப்பாங் சுங்கச்சாவடிக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், ஓய்வு மற்றும் சேவை மையங்கள் (R&R) பகுதியில் கூடுதல் நடவடிக்கைகள், சரக்கு ஒழுங்கமைப்புகளை மேம்படுத்தவும் இந்த தேதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நந்தா விளக்கினார்.
நெடுஞ்சாலை பயனர்கள், பயணத்தை முறையாக திட்டமிட்டு, வேக வரம்புகளைக் கடைபிடித்து, சாலை அடையாளப் பலகைகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், MyPLUS-TTA, TuJu Highway Navigation (LLM) செயலிகளைப் பயன்படுத்தி பயண நேர பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், சமீபத்திய போக்குவரத்து தகவல்களை LLM-ன் அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் போக்குவரத்து மேலாண்மை மையங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 7, 2026, 5:38 pm
சுங்கை டுவா குடியிருப்பில் பெண் கொலை விவகாரம்: பொறாமை காரணமா? போலீஸ் விசாரணை தீவிரம்
February 7, 2026, 3:00 pm
புதிய ஆடைப் பொதியில் RM2.4 மில்லியன் நாணயக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
February 7, 2026, 2:17 pm
மலேசிய இந்து ஆலய, இயக்கங்களின் மாநாடு; பத்துமலையில் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
February 7, 2026, 12:39 pm
தங்கம், பணம் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியை தூக்கிய வழக்கு: வெளிநாட்டு பெண் உட்பட ஆறு பேர் கைது
February 6, 2026, 9:01 pm
சட்டத்தை மீறுவதற்காக ஆலயங்கள் கட்டப்படவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்
February 6, 2026, 8:52 pm
தேசியத் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தம்: துணைப் பிரதமருடன் டத்தோஸ்ரீ ரமணன் ஆலோசனை
February 6, 2026, 5:12 pm
