நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்து ஆலய, இயக்கங்களின் மாநாடு; பத்துமலையில் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

மலேசிய இந்து ஆலய, இயக்கங்களின் மாநாடு மாபெரும் அளவில் பத்துமலையில் நடைபெறும்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

நாட்டில் ஆலயம், இந்து சமயம் குறித்த சர்ச்சைகள் பரவலாக எழுந்து வருகிறது.

இது மனதிற்கு மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது.

இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மலேசிய இந்து ஆலய, இயக்கங்களின் மாநாடு பத்துமலையில் நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், மஹிமா ஒருங்கிணைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

ஒரு நாள் மாநாட்டில் இந்த சர்ச்சைகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார.

இதனிடையே பத்துமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இலக்கவியல் அருங்காட்சியகம் இன்று அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததில் பெருமை.

குறிப்பாக பத்துமலை வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இலக்கவியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆக பத்துமலைக்கு வரும் மக்கள் கண்டிப்பாக இந்த அருங்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும்.

இது புதிய அனுபவத்தை மக்களுக்கு தரும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் புவான்ஸ்ரீ மல்லிகா, தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவக்குமார், அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் கோவிந்த் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset