செய்திகள் மலேசியா
தங்கம், பணம் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியை தூக்கிய வழக்கு: வெளிநாட்டு பெண் உட்பட ஆறு பேர் கைது
அம்பாங் ஜெயா:
ஹுலு கிள்ளான், தாமன் ஹில்வியூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மூன்று ஆண்கள் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்புப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் CCTV காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, விசாரணைக்காக வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட ஆறு நபர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த வீடியோ நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் சமூக ஊடகங்களில் பரவியதை அவர்கள் கண்டறிந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கைருல் அன்வார் காலித் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 26 டிசம்பர் அன்று ஏற்கனவே ஒரு பெண் புகார் அளித்திருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
“புகார் அளித்தவர், தனது முதலாளியின் மின்சார வாகனத்தின் (EV) பேட்டரியைச் சார்ஜ் செய்வதற்காகத் தாமன் ஹில்வியூவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, மதியம் 12.15 மணியளவில் இந்த சம்பவத்தைக் கண்டுள்ளார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, மூன்று கொள்ளையர்கள் தங்கம் இருப்பதாக நம்பப்படும் பாதுகாப்புப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய CCTV வீடியோ வைரலானது.
இதற்கு முன், ஒரு தொழிலதிபர், தனது வீட்டில் புகுந்த மூன்று கொள்ளையர்கள் சுமார் 100 கிலோ எடை கொண்ட தங்கம், ரொக்கம் நிரம்பிய பாதுகாப்புப் பெட்டியைத் திருடிச் சென்றதால், தமக்கு சுமார் RM3 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
இந்தச் சம்பவம், கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று, பாதிக்கப்பட்ட ஜோஹான் அல் ஃபதே (34) தனது மனைவியுடன் கிளந்தானுக்குச் சென்றிருந்த போது நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மூன்று நாட்கள் கழித்து அவரது ஊழியர் வீட்டிற்கு வந்தபோது தான் இந்த சம்பவம் தெரிய வந்ததாக ஜோஹான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 7, 2026, 5:38 pm
சுங்கை டுவா குடியிருப்பில் பெண் கொலை விவகாரம்: பொறாமை காரணமா? போலீஸ் விசாரணை தீவிரம்
February 7, 2026, 3:00 pm
புதிய ஆடைப் பொதியில் RM2.4 மில்லியன் நாணயக் கடத்தல் முயற்சி முறியடிப்பு
February 7, 2026, 2:17 pm
மலேசிய இந்து ஆலய, இயக்கங்களின் மாநாடு; பத்துமலையில் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
February 7, 2026, 1:12 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 50% சுங்கக் கட்டண தள்ளுபடி
February 6, 2026, 9:01 pm
சட்டத்தை மீறுவதற்காக ஆலயங்கள் கட்டப்படவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்
February 6, 2026, 8:52 pm
தேசியத் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தம்: துணைப் பிரதமருடன் டத்தோஸ்ரீ ரமணன் ஆலோசனை
February 6, 2026, 5:12 pm
