
செய்திகள் மலேசியா
மத்தியத் துறைமுகங்களில் கனரக வாகனங்கள் மீதான அமலாக்க நடவடிக்கை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
மத்தியத் துறைமுகங்களில் கனரக வாகனங்களுக்கான எதிரான அமலாக்க நடவடிக்கை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இந்த அமலாக்க நடைமுறை முதற்கட்டமாகத் தீபகற்ப மலேசியாவிலுள்ள
மத்தியத் துறைமுகங்களில் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
இறக்குமதி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்னதாக, முன்பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சரி பார்க்கப்படும்.
வாகனத்தோடு இணைந்து பொருட்களின் எடை குறிப்பிடப்பட்ட அளவிற்கு கூடுதலாக இருந்தால் அது தானியங்க முறையில் ரத்துச் செய்யப்படும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட வாகனம் பொருட்களைத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது.
அதேபோல், ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்னதாக, துறைமுக நுழைவாயிலில் வாகனங்கள் பொருட்களோடு இணைந்து எடை போடப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகம் இருப்பின் வாகனங்கள் துறைமுகத்திற்கு சரக்குகளைக் கொண்டு அனுமதிக்கபடாது என்றார்.
அதிக எடைகளை ஏற்றிச் செல்வதற்கான குற்றங்களுக்கு எதிரான கொள்கை குறித்த கூடுதல் விவரங்கள் அந்தந்த துறைமுக அதிகாரிகளால் தொழில்துறை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று இன்று புலாவ் இந்தாவில் உள்ள போர்ட் கிளாங் பயண முனையத்தில்மின்சார வாகனங்களை இயக்குவதற்கான கார் போக்குவரத்து லாரி ஓட்டுநர் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை முடித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm