
செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக டான்ஶ்ரீ ரம்லி ஙா தலிப் நியமனம்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநராக டான்ஶ்ரீ ரம்லி ஙா தலிப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பினாங்கு மாநிலத்தின் ஒன்பதாவது ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய ஆளுநரின் பதவிக்காலம் மே 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது
டான்ஶ்ரீ ரம்லி ஙாவின் நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து டான்ஶ்ரீ ரம்லி ஙா தனது பதவி நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பினாங்கு மாநில சட்டத்தின் விதி 1இன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில அரசாங்கம் தெரிவித்தது.
இந்த பணி நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
டான்ஶ்ரீ ரம்லி இதற்கு முன் பேராக் மாநில மந்திரி பெசாராக பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm