
செய்திகள் மலேசியா
மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பொழியும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோலாலம்பூர்:
இன்று மாலை 6 மணிவரை நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழியும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்தது
பெர்லீஸ், கெடா பினாங்கு மாநிலங்களில் கடுமையான மழை பொழியும் வேளையில் பேராக் மாநிலத்தின் சில மாவட்டங்களில் மழை பொழியும். பேராக்கில் கோல கங்சார், கிந்தா, முவாலிம், பத்தாங் படாங், கம்பார் ஆகிய மாவட்டங்களில் வானிலை மோசமாக இருக்கும்.
கிழக்கு கரை மாநிலங்களான பகாங், திரெங்கானு, கிளந்தானில் அதே மோசமான வானிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது
சபா, சரவாக் மாநிலங்களின் உட்புற பகுதிகளில் மாலை வேளையில் மழை பொழியும் என்று மெட் மலேசியா தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm