நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டுத் தலங்கள், மதப் பிரச்சினைகளை கையாள இஸ்லாம் அல்லாத மத ஆலோசனை வாரியம் நிறுவப்பட வேண்டும்: குணராஜ்

செந்தோசா:

வழிபாட்டுத் தலங்கள், மதப் பிரச்சினைகளை கையாள தேசிய ரீதியிலான இஸ்லாம் அல்லாத மத ஆலோசனை வாரியம்  நிறுவப்பட வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை வலியுறுத்தினார்.

வழிபாட்டுத் தலங்கள்,  முஸ்லிம் அல்லாத மதங்களின் உணர்திறன் தொடர்பான பிரச்சினைகளை மிகவும் கட்டமைக்கப்பட்ட, உள்ளடக்கிய முறையில் நிவர்த்தி செய்ய தேசிய அளவில் இஸ்லாம்அல்லாத மத ஆலோசனை வாரியத்தை நிறுவுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாரியம் தற்போதுள்ள மாநில அளவில் ரிபி எனப்படும் மதக் குழு போன்ற கட்டமைப்புகளின் பங்கை நிறைவு செய்யும்.

இது தற்போது மத சமூகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு சேனலாக செயல்படுகிறது.

மேலும் மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை இணக்கமாக தீர்க்கிறது. கூட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்கிறது, ஒற்றுமை குறித்த கொள்கை ஆலோசனைகளை வழங்குகிறது.

ரிபியுடன் நெருக்கமாக செயல்படும் தேசிய அளவிலான ஒரு ஆலோசனைக் குழு, வழிபாட்டுத் தலங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமலாக்க முயற்சிகளை வலுப்படுத்துவது.

இஸ்லாம் அல்லாத சமூகத்தை அடிக்கடி பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். தவறாக வழிநடத்தும், புண்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.

குறிப்பாக கோவில் ஹராம் போன்ற சொற்களின் பயன்பாட்டை குறிப்பிட்ட  அவர், இது சட்ட ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ துல்லியமாக இல்லை என்று அவர் விவரித்தார்.

பல வழிபாட்டுத் தலங்கள் உண்மையில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டவை. முழுமையான ஆவணங்களைக் கொண்டுள்ளன என்பது பலருக்குத் தெரியாது.

இருப்பினும் கோவில் ஹராம் போன்ற சொற்கள் வரலாற்று சூழல் அல்லது உண்மையான நிலையைக் கருத்தில் எடுத்துக் கொள்வது இல்லை.

மேலும் அது மதத்தைப் பற்றிய நியாயமற்ற எதிர்மறையான கருத்தை அளிக்கிறது.

ஆக இதுபோன்ற பிரச்சினைகளை கையான தேசிய ரீதியிலான இஸ்லாம் அல்லாத மத ஆலோசனை வாரியத்தை அரசு அமைக்க வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset