நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்த பிரதமர் உத்தரவு: ஃபஹ்மி

புத்ராஜெயா:

மலேசியா, சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.

கடந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின் பிங் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வந்திருந்தார்.

இப்பயணத்தின் போது  மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பல புரிந்துணர்வுகள் கையெழுத்தாகின.

இந்த அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒருங்கிணைக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கையொப்பமிடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்படும் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் விரைவில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் திட்டம்.

இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset