
செய்திகள் விளையாட்டு
46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி
ஈப்போ:
பேராக் மாநிலத்தின் இந்திய பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 46 ஆவது ஆண்டாக தேசிய பூப்பந்து விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் போட்டி ஈப்போ பூப்பந்து அரங்கம் கம்போங் சீமியில் எதிர்வரும் மே மாதம் 30,31, ஜுன் 1 இல் நடைபெறவுள்ளதாக இச் சங்கத்தின் தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான லோகநாதன் நாகப்பன் கூறினார்.
இவ்வாண்டில் 24 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள். அவற்றில் 35 வயதிற்கு மேற்பட்ட இரட்டையர் மகளிர் பிரிவு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த பிரிவு அறிமுகம் செய்யப்படுவதால் நாடு முழுவதுமுள்ள அதிகமான இந்திய மகளிர்கள் கலந்துகொள்வார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, இவ்வாண்டில் 10 வயது முதல் 70 வயதிற்கும் மேற்பட்டோர் இப்பூப்பந்து போட்டியில் கலந்துக்கொள்வார்கள். கடந்தாண்டில் 750 போட்டியாளர்கள் கலந்துண்டனர். ஆனால், இம் முறை அதற்கும் அதிகமான விளையாட்டாளர்கள் பங்கேற்பாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பூப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, நாடு முழுவதுமுள்ள இந்திய பூப்பந்து விளையாட்டாளர்கள் கலந்துகொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர். தொடர்புக்கு: 019-5592305.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am
FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இந்தியரான தஹ்ஸீன்
October 16, 2025, 9:48 am