
செய்திகள் மலேசியா
தேசிய கல்வி முறையில் தமிழ், சீன மொழிகளைக் கற்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும்: கல்வியாளர் கருத்து
பெட்டாலிங் ஜெயா:
தேசிய கல்வி முறையில் தமிழ், சீன மொழிகளைக் கற்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக விரிவுரையாளர் Ainol Madziah Zubairi கூறினார்.
பல ஆசியான் மொழிகளை தேசிய கல்வி முறையில் இணைப்பதற்கு முன் தமிழ், சீன மொழிகளைக் கற்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்னும் தாமதிக்காமல் அரசு தமிழ், சீன மொழிகளைக் கற்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மொழிக் கல்வி மூலம் மலேசியாவிலுள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் கலாச்சாரங்களை குழந்தைகள் அறிந்து கொள்வார்கள்.
முன்னதாக, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தாய்லாந்து, கெமர், வியட்நாம் போன்ற ஆசிய நாட்டு மொழிகளிகளைத் தேசிய கல்வி முறையில் கூடுதல் மொழிகளாக இணைப்பது குறித்து முன்மொழிந்தார்.
அதற்கு Ainol Madziah Zubairi இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm