
செய்திகள் மலேசியா
ஊழலைத் துடைத்தொழிப்பதில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனம் உறுதி
புத்ராஜெயா:
ஊழலைத் துடைத்தொழிப்பதிலும் நிலையான நிர்வாக நடைமுறையை மேலோங்க செய்வதிலும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் உறுதி கொள்வதாக மனிதவள மேம்பாட்டு நிறுவனம் HRDCorp தெரிவித்தது
ஊழலுக்கு எதிராக எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனம் விட்டுக்கொடுக்கும் போக்கினை துளியளவும் கடைபிடிக்காது. ஒரு நிலையான வேலை பண்பினை உருவாக்க அந்நிறுவனம் முனைப்பு காட்டும்
ஊழல் தடுப்பு உறுதிமொழியை HRDCorp தலைவர் டத்தோ அபு ஹுரய்ரா அபு யாஷிட், இயக்குநர்கள் வாரிய உறுப்பினர்கள், செயற்குழு நிர்வாகிகள், இயக்குநர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறாமல் இருக்கவும் அரசாங்க கட்டளைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற நடவடிக்கை முன்னெடுக்கும் விதமாக இந்த உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது .
மனிதவள அமைச்சின் டேவான் கெசுமாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி பார்வையிட்டார்.
அனைத்து கட்டங்களிலும் எச்.ஆர்.டி. கோர்ப் அதன் செயலாக்கம், உறுதி தன்மை ஆகியவை நிலைநிறுத்தும் தன்மையை கொண்டிருக்கும். ஒழுங்கு நிலையிலான வேலை சூழலை உருவாக்க எச்.ஆர்.டி கோர்ப் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm