நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் நாட்டு பொதுத்தேர்தல்: வெளிநாட்டில் இருக்கும் 18,389 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர் 

சிங்கப்பூர்: 

2025 சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற 18,389 வெளிநாட்டில் சிங்கபூரர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். 

சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் துறை இந்த தகவலைத் தெரிவித்தது 

அந்த மொத்த எண்ணிக்கையில் 9,759 பேர் அஞ்சல் முறையில் வாக்குகளைச் செலுத்தும் வேளையில் 8,630 பேர் வெளிநாட்டில் உள்ள 10 வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களிக்கவுள்ளனர். 

பெய்ஜிங், லண்டன், துபாய், நியூயார்க், சன் ஃபிரான்சிஸ்கோ, ஷங்காய், தோக்கியோ, வாஷிங்டன் டி.சி ஆகிய நகரங்களில் இந்த மையங்கள் செயல்படும் என்று பொதுத்தேர்தல் துறை விளக்கமளித்தது 

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் மே 3ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் சிங்கப்பூரில் 14 முறை பொதுத்தேர்தல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset