நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 உலகக் கிண்ண போட்டியில் மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி?

நியூயார்க்:

வரும் 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் மெஸ்ஸி.

பிபா உலகக் கிண்ண  கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடாவில், வரும் 2026 ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 

கடைசியாக 2022ல் கட்டாரில் நடந்த தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கிண்ணத்தை வென்றது. 

தற்போது 38 வயதான மெஸ்ஸி, மீண்டும் உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்பாரா, இல்லை ஓய்வு பெறுவாரா என விவாதம் எழுந்துள்ளன.

இது குறித்து மெஸ்ஸி கூறியதாவது,

என்னைப் பொறுத்தவரையில் கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து விட்டேன்.

இவற்றில் சில வியக்கத்தக்கவை, மிகவும் மதிப்பு மிக்கவை. கடவுள் தான் இதையெல்லாம் எனக்கு கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

வரும் 2026 உலகக் கிண்ண போட்டிய குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்பது விரைவில் தெரியவரும். 

இந்த வகையில் தற்போதைய 2025ஆம் ஆண்டு மிக முக்கியமானது. 

அதேநேரம், உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை என்றால், அது பொய் சொல்வது போல ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset