நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தவறான கணினி மென்பொருள் மூலம் மோசடிச் சம்பவங்கள்: $2.4 மில்லியன் இழந்த சிங்கப்பூரர்கள் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிச் சம்பவங்களில் குறைந்தது 2.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்தகைய மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் செய்யப்பட்டடன.

பாதிக்கப்பட்டவர்கள் Facebook, Tiktok தளங்களில் இடம்பெற்ற சில விளம்பரங்களைக் கண்டனர்.

அவற்றில் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் பெற அவர்களது தொடர்பு விவரங்களைப் பகிர்ந்தனர்.

பின் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை WhatsApp செயலி மூலம் தொடர்புகொண்டனர்.

அவர்களிடம் சந்தாக் கட்டணம் கட்டுவதற்கான இணையத்தள முகவரியைத் தந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி அட்டை விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அப்போது மோசடிக்காரர்களின் பரிந்துரைப்படி பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது Android கைத்தொலைபேசிகளில் மென்பொருள் ஒன்றைத் தரவிறக்கம் செய்தனர்.

அந்தத் தீய கணினி மென்பொருள் மூலம் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறுந்தகவலில் அனுப்பப்படும் OTP எண்களைப் பெற்றனர்.

அவற்றை வைத்து மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாய் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset