நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு
மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் முன்னேறினர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற  இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லயன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் லயன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை மேனுவல் உகார்டே, டியோகோ டலோட், புருனோ பெர்னாண்டஸ், பேனா கோபி மைனூ, ஹாரி மேக்குவேர் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுடைடெட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் எய்ண்ட்ராக் பிரான்கர்ட் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் அட்லாட்டிகோ பில்பாவ் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset