நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்

போகோடா:

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவிவருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது.

74 பேருக்கு நோய் தொற்றியிருப்பதாக கொலம்பிய சுகாதார அமைச்சர் கூறினார். இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.

மத்தியமேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. நாட்டிலேயே அங்குதான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

ஏடீஸ் (Aedes), ஹீமகோகஸ் (Haemagogus) கொசுக்களால் மஞ்சள் காய்ச்சல் பரவும்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset