நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவாலான சூழலை நம்பிக்கையோடு எதிர்க்கொள்வோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்

சிங்கப்பூர்:

எதிர்வரும் பொதுத் தேர்தல் சிங்கப்பூரின் 60வது சுதந்திர தின ஆண்டில் ஒரு முக்கியமான தருணத்தில் இடம்பெறவிருக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் (மசெக) தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், சிங்கப்பூரர்கள் செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது என்றும் குறிப்பாகச் சமூக இணக்கத்தை வலுப்படுத்துதல், சிங்கப்பூரர் எனும் கனவைப் புதுப்பித்தல், ஒவ்வொரு சிங்கப்பூரரும் அவரது சிறந்த தன்மையை வெளிப்படுத்த வழியமைக்கும் எதிர்காலத்தை அமைத்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

இதனால்தான் பொதுத் தேர்தலை இப்போது அறிவித்துள்ளேன். இந்த முக்கிய தறுவாயில் சிங்கப்பூரர்கள் நாட்டை நன்றாக வழிநடத்திச் செல்லக்கூடிய குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அவர்.

பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு வோங் சிங்கப்பூர் எதிர்கொண்ட ஒவ்வோர் இக்கட்டான சூழ்நிலையையும் சிறப்பாகக் கடந்துவந்ததில் மசெக சிங்கப்பூரர்களுடன் தோளோடு தோள் நின்றது என்றார்.

இது எளிதான பாதையன்று என்றும் உலகம் தற்போது ஆழமான மாற்றத்தை நோக்கிச் செல்வதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு இது நிச்சயமற்றதாக இருக்கும் என்றும் சொன்ன பிரதமர் வோங், தமது கட்சியின் தேர்தல் அறிக்கை மாறிவரும் உலகம், புதிய அணி, மாறாத உறுதி ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தும் எனக் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset