நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

புத்ராஜெயா:

மலேசியாவின் சிறந்த நட்பு நாடான இந்தியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்தியாவை ஒரு சிறந்த, நட்பு நாடாகும். அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கலாச்சார உறவுகள், வளர்ந்து வரும் புவிசார் அரசியல் முக்கியத்தும் வாய்ந்தது.

நாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான கூட்டுப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார்,  அனைத்துத் துறைகளிலும் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

நாங்கள் பல கவலைக்குரிய பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தோம். அவற்றை எங்கள் குழு கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், கொள்கையளவில், இந்தியாவை ஒரு சிறந்த,  நட்பு நாடு என்று நாங்கள் விவரிக்கிறோம், கலாச்சார ரீதியாகவும், இப்போது புவிசார் அரசியல் ரீதியாகவும் மலேசியாவுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று அவர் இன்று இங்கு கூறினார்.

மோடியின் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடர்ந்து இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மலேசியா எதிர்பார்க்கிறது.

மேலும் மோடியின்  இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset