செய்திகள் மலேசியா
தைப்பூச தைப்பூச உண்டியல் காணிக்கை பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
தைப்பூச தைப்பூச உண்டியல் காணிக்கை பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
உலகளாவிய நிலையில் தைப்பூச விழா கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
மலேசியாவை பொறுத்து வரையில் பத்துமலை இந்த விழாவிற்கு தாய் கோவிலாக விளங்குகிறது.
கடந்த மாதம் முதல் இன்று பக்தர்கள் பத்துமலைக்கு வருகின்றனர். குறிப்பாக இன்னமும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இன்றுடன் பத்துமலை தைப்பூச விழா ஒரு முடிவுக்கு வருகிறது. நாளை கடைகள் அனைத்தும் அகற்றப்படும்.
இந்நிலை பத்துமலை தைப்பூச விழாவின் உண்டியல் காணிக்கை இன்று பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இவ்வேளையில் பத்துமலை தைப்பூச விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக பக்தர்கள் அனைவருக்கும் தேவஸ்தானம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இனி அடுத்தாண்டு தைப்பூச விழாவில் நாம் மீண்டும் சந்திப்போம்.
மக்களின் நல்ல விதமான கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பத்துமலை தைப்பூச விழா இன்னும் சிறப்பாக நடத்தப்படும்.
அதற்காக என்னை அடித்து தான் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 8, 2026, 6:45 pm
மலேசியாவுக்கான இருநாள் பயணம் முடித்துக் கொண்டு மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
February 8, 2026, 3:57 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் டத்தோஸ்ரீ அன்வாரின் பங்கு பாராட்டுக்குரியது: மோடி
February 8, 2026, 2:23 pm
3ஆர் விவகாரத்தை தொட்டால் தண்டனை என்ற அச்சம் அனைவருக்கும் வர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 8, 2026, 10:32 am
ஜம்ரி வினோத் கைது: கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில்
February 7, 2026, 11:31 pm
தமிழ்மொழி இந்தியாவை உலகுடன் இணைக்கிறது: மோடி
February 7, 2026, 11:23 pm
