நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3ஆர் விவகாரத்தை தொட்டால் தண்டனை என்ற  அச்சம் அனைவருக்கும் வர வேண்டும்: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

3ஆர் விவகாரத்தை தொட்டால் தண்டனை என்ற அச்சம் அனைவருக்கும் வர வேண்டும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் 3ஆர் விவகாரம் தலை விரித்தாடுகிறது. 3ஆர் என்பது இந்தியர்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இவ்விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

குறிப்பாக 3ஆர் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச் சட்டத்தை தொட்டால் தண்டனை என்ற அச்சம் அனைவருக்கும் வர வேண்டும் 

இதன் அடிப்படையில் தான் உமா காந்தான் தலைமையின் புரட்சி இயக்கத்தின் இளைஞர்கள் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ளனர்.

பத்துமலை நுழைவாயலில் இதற்கான கையெழுத்து வேட்டை நடத்தப்படுகிறது. ஆக பொதுமக்கள் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.

இதனிடையே 10,000 கையெழுத்து என்ற திட்டத்துடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

மேலும் இந்த கையெழுத்து பாரங்கள் அனைத்தும் நாளை நாடாளுமன்றத்தில் அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உமா காந்தன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset