நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்மொழி இந்தியாவை உலகுடன் இணைக்கிறது: மோடி

செர்டாங்:

தமிழ்மொழிதான் இந்தியாவை உலகுடன் இணைக்கிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர் மோடி கூறினார்.

கோலாலம்பூரில் மோடி பேசுகையில், மலேசியாதான் இரண்டாவதாக அதிக இந்திய வம்சாவளிகளைக் கொண்ட நாடாக உள்ளது.

இந்தியா - மலேசியாவை இணைப்பதில் பலவும் பங்களிக்கின்றன. அவற்றில் கலாசாரம்தான் எங்களை இணைக்கும் உயிருள்ள பாலம்.
தமிழ்தான், இந்தியாவை உலகுடன் இணைக்கிறது. தமிழ் இலக்கியம் முடிவற்றது; தமிழ்க் கலாசாரம் உலகளாவிய ஒன்று.

இந்திய திரைப்படங்களும் இசையும் மலேசியாவில் பிரபலமாக இருப்பதாக அறிகிறேன். 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு பழைய ஹிந்தி பாடலை பாடிய வீடியோக்களும் வைரலாகின.

புகழ்பெற்ற எம்ஜிஆரின் தமிழ்ப் பாடல்களையும் அவர் விரும்புவது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்வதைத் தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset