செய்திகள் மலேசியா
பிளவுகள் இல்லாமல் இந்திய முஸ்லிம் இயக்கங்களை ஒன்றிணைப்பது தான் பெர்மிம் புதிய நிர்வாகத்தின் முதல் கடமை: அஸ்மான் ஷா
பெட்டாலிங் ஜெயா:
பிளவுகள் இல்லாமல் இந்திய முஸ்லிம் இயக்கங்களை ஒன்றிணைப்பது தான் பெர்மிம் பேரவை புதிய நிர்வாகத்தின் முதல் கடமை என்று அப்பேரவையின் புதிய தலைவர் முஹம்மது அஸ்மான் ஷா இதனை கூறினார்.
பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு பெட்டாலிங் ஜெயா மாஹ்சா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
தேர்தல் ஆண்டு என்பதால் பரபரப்பான சூழ்நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஆரம்பத்தில் அனைத்து பதவிகளுக்கும் போட்டிகள் இருந்தன.
ஆனால் சமுதாயத்தின் நலன் கருதி ஒரு தரப்பு போட்டியில் இருந்து முற்றிலும் விலகிக் கொண்டது.
இதைத் தொடர்ந்து பெர்மிம் பேரவையின் தலைவராக போட்டியின்றி தேர்வு அஸ்மான் ஷா தேர்வு செய்யப்பட்டார்.
முஹம்மது சுல்தான் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கலிருஸ்ஸமான், அப்துல் அலிம், ஜரீனா பேகம், அப்துல் மாலிக், முகம்மது நசிர் ஆகியோர் உதவித் தலைவர்களாக தேர்வு பெற்றனர்.
ஆதம் மாலிக் செயலாளராகவும் டத்தோ ஷேக் ஜமீல் பொருளாளராகவும் தேர்வு பெற்றனர்.
அதே நேரத்தில் பல புதிய முகங்கள் நிர்வாக குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய முஸ்லிம் சங்கங்களின் தாய் பேரவையாக பெர்மிம் விளங்கும்.
அதே வேளையில் பிளவுகள் இல்லாமல் இந்திய முஸ்லிம் இயக்கங்களை ஒன்றிணைப்பது தான் புதிய நிர்வாகத்தின் முதல் கடமை என்று அஸ்மான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 8, 2026, 6:45 pm
மலேசியாவுக்கான இருநாள் பயணம் முடித்துக் கொண்டு மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
February 8, 2026, 3:57 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் டத்தோஸ்ரீ அன்வாரின் பங்கு பாராட்டுக்குரியது: மோடி
February 8, 2026, 2:23 pm
3ஆர் விவகாரத்தை தொட்டால் தண்டனை என்ற அச்சம் அனைவருக்கும் வர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 8, 2026, 12:28 pm
தைப்பூச தைப்பூச உண்டியல் காணிக்கை பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா
February 8, 2026, 10:32 am
ஜம்ரி வினோத் கைது: கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில்
February 7, 2026, 11:31 pm
தமிழ்மொழி இந்தியாவை உலகுடன் இணைக்கிறது: மோடி
February 7, 2026, 11:23 pm
