நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவுக்கான இருநாள் பயணம் முடித்துக் கொண்டு மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்

சிப்பாங்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவுக்கு புறப்பட்டார்.

மோடியும் அவரது குழுவினரையும் ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) உள்ள புங்கா ராயா வளாகத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டது.

இந்த பயணத்தின் போது கலந்து கொண்ட அமைச்சராக இருந்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மோடியை வழியனுப்பினார்.

முன்னதாக, ராயல் மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த 28 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்புடன் மோடிக்கு ஒரு மரபார்ந்த வழியனுப்பல் வழங்கப்பட்டது.

மோடியின் புறப்பாட்டைக் குறிக்கும் வகையில் மலேசியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU), ஆவணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதை இரு தலைவர்களும் ஸ்ரீ பெர்டானாவில் கண்டனர்.

ஆகஸ்ட் 2024 இல் இருதரப்பு உறவுகள் விரிவான மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவும் இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அன்வார் கூறினார்.

வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதால், இந்தியா மலேசியாவிற்கு ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாக பிரதமர் அன்வார் கூறினார்.

மலேசியா-இந்தியா பொருளாதார உறவுகள் தொடர்ந்து வலுவான வேகத்தைக் காட்டுகின்றன, மொத்த இருதரப்பு வர்த்தகம் 2025 இல் RM79.49 பில்லியனை (US$18.59 பில்லியன்) எட்டியது.

மலேசியாவின் ஏற்றுமதி RM52.3 பில்லியன் (US$12.24 பில்லியன்),  இறக்குமதிகள் RM27.19 பில்லியன் (US$6.35 பில்லியன்). முக்கிய ஏற்றுமதி பொருட்களில் பாமாயில், பாமாயில் சார்ந்த விவசாய பொருட்கள், மின்சார மின்னணு பொருட்கள் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் இறக்குமதிகள் முக்கியமாக விவசாயம் சார்ந்த  ரசாயன பொருட்கள் ஆகும்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset