நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு 

மலே: 

இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது 

காசா மக்களுக்கு ஆதரவு வழங்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் முஹம்மத் முய்சு கூறினார் 

மாலத்தீவு நாட்டின் குடிநுழைவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது 

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படையினர் காட்டுமிராண்டி தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

மாலத்தீவு இந்த தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது 

இந்த அறிவிப்பு உடனடியாக நடப்புக்கு வருவதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset