
செய்திகள் மலேசியா
சீன அதிபருக்கு இஸ்தானா நெகாராவில் அதிகாரப்பூர்வ அரச மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்கு இஸ்தானா நெகாராவில் அதிகாரப்பூர்வ அரச மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அழைப்பின் பேரில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் நேற்று தொடங்கிய மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வந்துள்ளார்.
இப்பயணைத்தில் அவர் இன்று இஸ்தானா நெகாரா சென்றார். இஸ்தானா நெகாராவில் அவருக்கு அதிகாரப்பூர்வ அரச மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 10.30 மணிக்கு அதிபரை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், மத்திய அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
இஸ்தானா நெகாரா அணிவகுப்பு மைதானத்தில் வரவேற்பு விழா, ராயல் மலாய் ரெஜிமென்ட் மத்திய இசைக்குழுவின் இரு நாடுகளின் தேசிய கீதங்களின் இசையுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து ராயல் பீரங்கி ரெஜிமென்ட்டின் 41ஆவது பேட்டரியின் 21 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் சீன அதிபர், மாமன்னருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm