
செய்திகள் தொழில்நுட்பம்
தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் நுட்பவியல் விழா
கோம்பாக்
மலேசியா மாஹிர் அறக்கட்டளை (Yayasan Mahir Malaysia), தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியம். இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்துடனும் இணைந்து ‘எதிர்கால நுட்பவியல் தொழிற்கல்வி & நுட்பவியல் விழா 2025’ எனும் நிகழ்ச்சியை மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பயன்மிகுந்த விழாவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் 176 மாணவர்களோடு சுமார் 80 பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவரும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியினைக் குறித்த விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
மெய்நிஜகர் சூழலோடு கூடிய ட்ரோன் பயிற்சி
மெய்நிகர் சூழலோடு கூடிய 'ட்ரோன்' பயிற்சி, "ட்ரோன்' குறித்த விளக்கங்கள், பல்லூடகக் கண்காட்சி, கணினியின் மென்பொருளின் அறிமுகம், மின்சார வாகனத்தின் தனித்தன்மை மற்றும் அதன் எதிர்காலம் குறித்த விளக்கம், PS5 விளையாட்டு அனுபவம், தொழிற்கல்வி & தொழில்நுட்பக்கல்வியினால் உருவாகும் வேலை வாய்ப்புக்கான விளக்கவுரை என நான்கு மணி நேரம் தாமான் மெலாவாத்தியின் பள்ளிச்சூழலே உற்சாகமாகக் காணப்பட்டது.
மாஹிர் அறக்கட்டளையின் இயக்குநர் டத்தோ ஹஜி நூருல் அரிபின் அப்துல் மஜித், இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
பள்ளி பருவத்தில் மாணவர்களிடையே இருக்கவேண்டிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி துறையைக் குறித்த விளக்கத்தைக் கொடுத்து, மாணவர்களிடையே நவீனச் சிந்தனைகளையும் தொழிற்கல்விகளின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த அறவாரியம் இயங்குகின்றது என அவர் கூறினார்.
எதிர்கால சவால்களை கண்டறிய வேண்டும்
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறை (Automation), மின்சார வாகனங்கள் (EV), மற்றும் ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், எதிர்கால சாவல்களை எதிர்நோக்கும் மாணவர்களை உருவாக்க முடியும் என்பதனை அவர் தெளிவுப்படுத்தினார்.
மேலும், தொலைநோக்கு சிந்தனையுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ய ஒத்துழைத்துதோடு அதற்காக பல முயற்சிகளையும் செய்த இந்நிகழ்ச்சியின் இயக்குநரான திரு. அன்பழகன் குழந்தை அவருக்கும் அவர்தம் குழுவினருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
பள்ளியின் தலைமையாசிரியரான குணசேகரன் முனியாண்டி இந்தப் பயனுள்ள நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி மேலாளர் வாரியத்திற்கும் மலேசியா மாஹிர் அறக்கட்டளைக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு உந்துதலாக அமையும் இவ்வாறான நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெற வேண்டுமென என தமது வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் திரு. அன்பரசன் குழந்தை, இந்த நிகழ்ச்சி பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், ஆசிரியர்கள் ஆகியோரால் மாணவர், பெற்றோர் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி உலகளாவிய போட்டி மற்றும் சவால்கள் நிறைந்த யுகத்தைச் சந்திக்கத் தேவைப்படும், மனித திறன்களையும் தொழில்நுட்ப திறன்களையும் விதைக்கும் ஆற்றல் உடையது என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இந்தத் துறையில் பின்தங்காமல் முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தங்கள் குழந்தைகளின் நலன் கருதி அவர்களோடு இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்களின் உற்சாகத்தையும் அன்பரசன் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதோடு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெற்ற தொழில்நுட்ப புதிர்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். அதுமட்டுமன்றி, முன்பதிவு செய்த முதல் 100 மாணவர்கள் ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து சிறப்பு பரிசுகளைப் பெற்றனர்.
இதன் உச்சக்கட்டமாக, பள்ளி மேலாளர் வாரியம், மாணவர்களிடையே தொழில்நுட்பம், தொழிற்திறன் ஆற்றலை மேம்படுத்துவதற்காக 50 மாணவர்களுக்கு ட்ரோன் மற்றும் கோடிங் பயிற்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தனர்.
பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம், தொழில்நுட்ப யுகத்தின் சவால்களை எதிர்நோக்கும் திறன்மிக்க மாணவர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளுக்கு முழுமையான ஆதரவையும் முயற்சியையும் தொடர்ந்து நல்குவர் என்று தெரிவித்தனர்.
இதன் மூலமாக, தமிழ் பள்ளி மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகம் மற்றும் தொழில்துறை புரட்சியில் போட்டியிடும் திறனைப் பெறுவார்கள் என்பது வந்திருந்த பெற்றோர்களின் கருத்தாக அமைந்தது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2025, 10:22 am
சீனா 10G இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
March 25, 2025, 10:23 pm
இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
March 22, 2025, 4:55 pm
மாரடைப்பை முன்கூட்டியே 96% துல்லியமாக கண்டுபிடிக்கும் செயலி: 14 வயது சிறுவன் சாதனை
March 19, 2025, 7:56 am
9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
March 17, 2025, 12:32 am
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு: பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
March 1, 2025, 2:19 pm
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
February 27, 2025, 5:06 pm
Instagram Reels - தனிச் செயலியாகலாம்
February 17, 2025, 11:38 am
'Grok 3' புதிய AI வசதியை வெளியிடவிருக்கும் எலோன் மஸ்க்
January 27, 2025, 1:50 pm