நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வெடுங்கள் பாக் லா; உங்கள் சேவை பாராட்டத்தக்கது: பிரதமர்

கோலாலம்பூர்:

ஓய்வெடுங்கள் பாக் லா. உங்கள் சேவை பாராட்டத்தக்கது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மறைந்த ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி நினைவுகளை பிரதமர் முகநூலில் பகிர்ந்துள்ளார்.

பாக் லா, நிம்மதியாக இருங்கள். இந்த எளிமையான அரசியல்வாதியின் சேவைகளுக்கு மலேசியா நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

பிரதமர் இந்தப் பதிவு 43,700 லைக்குகளைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் 492,000 பார்வைகளும், பேஸ்புக்கில் 23,500 லைக்குகளும் பெற்றுள்ளன.

முன்னதாக பிரதமர் தேசிய பள்ளிவாசலில் துன் அப்துல்லா படாவியின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset