
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் அப்துல்லாஹ் அஹமது படாவியின் நல்லுடலுக்கு சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அஞ்சலி செலுத்தினார்
கோலாலம்பூர்:
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் அப்துல்லாஹ் அஹமது படாவிக்கு இன்று அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
லீயுடன் அவரின் துணைவியாரும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பிரதமர் லாரன்ஸ் வோங் அவரது Facebook பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். மலேசியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குத் திரு படாவி முக்கிய பங்காற்றினார் என்றும் ஆசியான் நாடுகளின் நிலையை உயர்த்தினார் என்றும் வோங் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தமது முகநூல் பக்கத்தில் அவருடைய அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அப்துல்லாஹ் படாவி மலேசியப் பிரதமராக இருந்தபோது இருதரப்பு உறவு மேம்பட்டதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm