
செய்திகள் இந்தியா
அதானி குழுமத்தின் பராமரிப்பில் உள்ள குஜராத் துறைமுகப் பகுதியில் ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்
அகமதாபாத்:
அதானி குழுமத்தின் பராமரிப்பில் உள்ள குஜராத் கடற்கரை துறைமுகப் பகுதியில் ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், இந்திய கடல் எல்லைக் கோடு அருகே போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டன.
அப்போது அருகில் வந்த கடலோர காவல்படை கப்பலைக் கண்டதும் படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இதையடுத்து, 300 கிலோ போதைப்பொருள்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்தது.
அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடி இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள் மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் விசாரணைக்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm
பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 15, 2025, 11:35 am
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
April 13, 2025, 3:22 pm
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
April 11, 2025, 6:11 pm