
செய்திகள் மலேசியா
சீனா அதிபர் ஜி ஜின்பிங் மலேசியா வருகை: கே.எல்.ஐ.ஏ 2 முனையத்தில் நுழைய தற்காலிக தடை
கோலாலம்பூர்:
சீனா அதிபர் ஜி ஜின்பிங் மலேசியா வருவதையொட்டி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்குச் செல்லும் சாலைகள் யாவும் மூடப்படுகிறது.
நாளை முதல் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளும் கே.எல்.ஐ.ஏ 2 இன் நிலையமும் தற்காலிகமாக நுழைய தடை விதிக்கப்படும் என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும், மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் கே.எல்.ஐ.ஏ 2இல் தற்காலிக தடை விதிக்கப்படுகிறது
கே.எல்.ஐ.ஏ 2 இல் இறங்கும் பயணிகள் யாவரும் கே.எல்.ஐ.ஏ ட்ரான்சிட் மூலம் கே.எல்.ஐ.ஏ 1க்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மலேசியாவிற்குச் சீனா நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் நாளை ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை மலேசியாவில் அலுவல் பயணம் மேற்கொள்கிறார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm