
செய்திகள் இந்தியா
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன. மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் யுபிஐ செயல் இழந்தது.
நேற்று மீண்டும் யுபிஐ பரிவர்த்தனை முடங்கியது. நேற்று காலை 11.30 மணிக்கு இதுதொடர்பான புகார்கள் பதிவாகின. கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால் அனைவரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
பகல் 12.56 மணி வரை 2,147 புகார்கள் பதிவாகியுள்ளன. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து என்பிசிஐ இதுபற்றி நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்க்க முயன்றது. மாலையில் மீண்டும் யுபிஐ செயல்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm
பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 15, 2025, 11:35 am
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
April 11, 2025, 6:11 pm