
செய்திகள் இந்தியா
அரசு வேலை, நிலம் வேண்டாம்; ரூ.4 கோடி போதும்: வினேஷ் போகத்
புதுடெல்லி:
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அரை இறுதிப் போட்டியின் கூடுதல் எடை காரணமாக அவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்த நிலையில், ”ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்” என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்திருந்தது. கடந்த மார்ச் மாத இறுதியில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போது பேசிய ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, வினேஷ் போகத் இந்த பிரச்னையை சட்டமன்றத்தில் எழுப்பினார். அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அதன்படி, ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது குரூப் A வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என ஹரியானா அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அரசு அறிவித்ததில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை தேர்வு செய்ய வினேஷ் போகத் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm
பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 15, 2025, 11:35 am
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
April 13, 2025, 3:22 pm
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
April 11, 2025, 6:11 pm